1. Skip to Menu
  2. Skip to Content
  3. Skip to Footer>
Home >> எம்மைப் பற்றி >> பொதுவான நோக்கு
வழு
  • JFolder::create: Could not create directory
  • Can't create directory: images/stories/thumbnails
  • JFolder::create: Could not create directory
  • JFolder::create: Could not create directory
  • Can't create directory: images/stories/thumbnails/remote
  • JFolder::create: Could not create directory
அறிவிப்பு
  • Change the permissions for all the folders to 777
  • Change the permission for all the folders to 777

எம்மைப் பற்றி

எமது நோக்கு
‘சமூகப் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தும் வகையில் நிஜ ஆதன முகாமைத்துவத்திலும் விலைமதிப்பீட்டு விடயத்திலும் மிக உன்னத சுருக்கமிகு உலகலாவிய நியமங்களினூடாக தொழில்சார்ந்த சிறப்பைப் பேணுதல்’

எமது செயற்பணி
‘இலங்கை அரசாங்கத்திற்கு தொழில்தோ்ச்சி மிகுந்த விலைமதிப்பீடும் ஆதன முகாமைத்துவமும் சார்ந்த சேவைகளை வழங்குவதும், வினைத்திறனும் பயன் வாய்ந்ததுமான ஒரு முகாமைத்துவக் கட்டமைப்பினூடாக போட்டித்தன்மை வாய்ந்ததாகவும் ஆகுசெலவு மதிப்புடையதாகவும் விளங்குதல்’

எமது வரலாறு
 

  • அரச நிலங்களின் விற்பனையும் குத்தகையும்
  • காணிகள் பதிவு
  • ‘சன்னசஸினதும்’ உறுதிகளினதும் பதிவு
  • காணி மீள்தாபிப்பு
  • காணி எல்லைகள் பற்றிய வரைவிலக்கணம்
  • காணிகளைப் பகுதிகளாகப் பிரித்தல்
  • கண்டி மரபுரிமைக் காணி உரித்து மாற்றல்
  • கோரலும் காணி நிர்ணயமும்
  • நில அளவைகள்
  • காணி சுவீகரித்தல்
நகரப் புறங்களிலுள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான சொத்துக்களினதும் நிலையான ஆதனங்களினதும் ஆண்டு வரிமதிப்பையும் ஏனைய காணி சார்ந்த விலைமதிப்பீட்டு விடயங்களையும் கவனிக்கும் முகமாக 1921 ஆம் ஆண்டு யூன் மாதம் 01 ஆம் திகதி ஒரு உள்ளூராட்சி மன்ற சபை தாபிக்கப் பட்டது.
உள்ளூராட்சி மன்ற சபையின் கீழ், அரசாங்க வரிமதிப்பீட்டாளர் பதவிக்கும் அவரது பதவியணிக்குமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அரசாங்க வரிமதிப்பீட்டாளர் பதவி 1923 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டிருக்கின்றது. அரச ஆதனங்களினது வரிமதிப்பீட்டிற்கும், ஆதன வரி விலைமதிப்பீட்டிற்கும், காணி சுவீகரித்தல் விடயத்திற்கும், உள்நாட்டு வரிகளுக்கான உள்ளூராட்சி மன்றங்களின் வரிமதிப்பு மற்றும் விலைமதிப்பீடு முதலிய விடயங்களுக்கும் பொறுப்பாகவிருக்கும் பணி அரசாங்க வரிமதிப்பீட்டாளருக்குச் சாட்டப்பட்டது.
 
அரசாங்க வரிமதிப்பீட்டாளரின் நியமனத்தைக் கொண்டு, விலைமதிப்பீடுகள் விதமும் உள்ளடக்கமும் அன்றிருந்த சிவில் சேவை நிருவாக மதிப்பீட்டு முறையிலிருந்து ஒரு தொழில்தேர்ச்சியான விலைமதிப்பீட்டு நடபடிக்கைக்கு நகர்ந்தது. பணி அளவு அதிகரிப்பைக் கருத்திற்கொண்டு, 1926 ஆம் ஆண்டில் ஒரு உதவி அரசாங்க வரிமதிப்பீட்டாளர் நியமிக்கப்பட்டார்.ந்தத் திணைக்களம் பொதுத் திறைசேரியுடன் ஒன்றிணைக்கப்பட்டதையும், பொதுத் திறைசேரியின் விலைமதிப்பீட்டுப் பிரிவு உருவானதையும் அடுத்து, அந்த அரசாங்க வரிமதிப்பீட்டாளர் என்ற பதவிப் பெயர் 1933 ஆம் ஆண்டு ஒற்றோபர் மாதம் 01 ஆம் திகதி அரசாங்க விலைமதிப்பீட்டாளர் என மாற்றம் அடைந்தது.
திரு ஜே.ஜி. மொர்லே, எப்f.எஸ்.ஐ 1932 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பொதுத் திறைசேரியின் விலைமதிப்பீட்டுப் பிரிவினது அரசாங்க வரிமதிப்பீட்டாளராக / விலைமதிப்பீட்டுப் பொறுப்பதிகாரியாக நியமிக்கப் பட்டார். இவரைத் தொடர்ந்து, திரு ஏ.ஜி.பீ. விட்டகர் என்பவர் 1933 ஆம் ஆண்டு ஒற்றோபர் 18 ஆம் திகதியிலிருந்து அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.
1939 ஆம் ஆண்டளவில், அரசாங்கத்தின் சார்பில் இரண்டு நிறுவனங்கள், அதாவது திறைசேரியின் விலைமதிப்பீட்டுப் பிரிவும் உள்ளூராட்சி மன்ற விலைமதிப்பீட்டாளர் திணைக்களமும் விலைமதிப்பீட்டுப் பணிகளை மேற் கொண்டு வந்தன.
செலவுகளைக் குறைக்கும் ஒரு பரிகார நடவடிக்கையாக, இந்த இரண்டு பிரிவுகளும் 1939 ஆம் ஆண்டு ஒற்றோபர் மாத்தில் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு பொறுப்பதிகாரியின் கீழ் பொறுப்புச் சாட்டப்பட்டது. இதன் பயனாக, கெப்டன் ஈ.ஜி. ஈஸ்ட்மென் என்பவர் பிரதான விலைமதிப்பீட்டாளராக நியமிக்கப்பட்டு புதிய திணைக்களத்தினது பொறுப்பதிகாரியாக நிறுத்தப்பட்டார்.
இந்தத் திணைக்களத்தின் பணிகள் ‘பொதுப் பிரிவு’ மற்றும் ‘வரிவிதிப்புப் பிரிவு’ என இரண்டாக வகுக்கப் பட்டன. இந்த இரண்டு பிரிவுகளும் அமைக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவும் ஒரு உதவி விலைமதிப்பீட்டாளரின் பொறுப்பின் கீழ் தொழிற்பட்டது.
கெப்டன் ஈ.ஜி. ஈஸ்ட்மென் 1946 ஆம் ஆண்டு யூன் மாதம் 30 ஆம் திகதி பிரதான விலைமதிப்பீட்டாளர் பதவிலிருந்து விலகினார். அதன் பின்னர், திரு சி. ஸ்டிவேட் ஓர்ர் என்பவர் பிரதான விலைமதிப்பீட்டாளராக நியமிக்கப் பட்டார்.
திரு சி. ஸ்டிவேட் ஓர்ர் என்பவரின் பதவி விலகலின் பின்னர், திரு பி.எச். விக்ரமசிங்க 1948 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் 01 ஆம் திகதி பிரதான விலைமதிப்பீட்டாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். இவர் இந்தப் பதவியை வகிப்பதற்கான முதலாவது இலங்கையர் என்பது குறிப்பிடத்தக்கது. விலை மதிப்பீட்டுத் துறையின் தொழில்வாண்மை நோக்கில், இவரது பதவி காலப் பகுதியில், இலங்கைத் தொழில்நுட்பக் கல்லூரியில் ‘விலைமதிப்பீடு பற்றிய டிப்ளோமா’ பாடநெறி ஆரம்பிக்கப்பட்டது.
பேராசிரியர் கல்டோவ் அவர்களின் ஆலோசனையின் பேரில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் ‘செல்வ வரி’ அறிமுகப்படுத்தப்பட்டதையும், பெற்றோலியக் கூட்டுத்தாபனச் சட்டத்தின் கீழ் பெற்றோல் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பொறுப்பேற்கப்பட்டதையும் தொடர்ந்து, திணைக்களத்திற்கு அதிக வேலைப்பளு உருவானது. 1948 ஆம் ஆண்டிலிருந்த 83 எண்ணிக்கையான ஊழியர்கள் 1967 ஆம் ஆண்டில் 222 எண்ணிக்கையாக அதிகரிக்கப் பட்டமை இந்த அதிகரித்த வேலைப்பளுக்களை வெற்றிகரமாக நிருவகிக்க உதவியது.
திரு டீ.பி.பி. அபேகுணவர்த்தன 1967 ஆம் ஆண்டு பிரதான விலை மதிப்பீட்டாளர் பதவிக்கு நியமனம் பெற்றார். திணைக்களத்தின் முன்னேற்றக் கட்டுப்பாட்டு முறைமையை இவர் முதல் முதலாக அறிமுகப்படுத்தினார். அத்துடன் இவரது பதவி காலத்தில், இலங்கைத் தொழில்நுட்பக் கல்லூரியில் சிங்கள மொழிமூல விலைமதிப்பீட்டு டிப்ளோமா பாடநெறி ஆரம்பிகப்பட்டது.
காணிகள் விடய அமைச்சின் கீழ் இயங்கி வந்த இந்த விலைமதிப்பீட்டுத் திணைக்களம் 1970 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் பின்னர், நிதி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது.
திரு டீ.பி.பி. அபேகுணவர்த்தன என்பவர் 1971 ஆம் ஆண்டு பிரதான விலை மதிப்பீட்டாளர் பதவியிலிருந்து ஓய்வுபெற்றார். அதன் பின்னர், நிதி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளராகப் பணியாற்றிய திரு எல்.ஓ. த சில்வா, 1974 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி திரு கே.எஸ்.பி.டீ. பெர்னாந்து பிரதான விலைமதிப்பீட்டாளராக நியமிக்கப்படும் வரை குறுகிய ஒரு காலத்திற்கு பிரதான விலைமதிப்பீட்டாளராகத் தொழிற்படும் பொருட்டு பொறுப்புச் சாட்டப்பட்டு நியமிக்கப்பட்டார்.
1974 ஆம் ஆண்டில், இந்தத் திணைக்களம் இடத்திற்கு இடம் அதன் அலுவலகத்தை மாற்றுவதை நிறுத்தியது. அதனைத் தொடர்ந்து, இலக்கம் 748, மருதானை வீதி, கொழும்பு 10 என்ற முகவரியில் “விலைமதிப்பீட்டு இல்லம்” தாபிக்கப்பட்டது. இந்த விலைமதிப்பீட்டு இல்லம் விலைமதிப்பீட்டுத் திணைக்களத்தின் சின்னமாக மாறியது.
விலைமதிப்பீட்டுத் துறையை மிகவும் தொழில்வாண்மை நோக்கியதாக எடுத்துச் செல்லும் பொருட்டு, விலைமதிப்பீட்டாளர்களுக்கான தொழில் தேர்ச்சிக் கற்கைப் பாடநெறியாக விளங்கும் ஆதன முகாமைத்துவ விலை மதிப்பீட்டு பீஎஸ்சி பட்டப்படிப்புக் கல்வி, 1972 ஆம் ஆண்டு கொழும்புப் பல்கலைக்கழகத்திலும், அதன் பின்னர் வித்தியோதய பல்கலைக்கழகத்திலும் (இன்றைய சிறீ ஜயவர்த்தனபுரப் பல்கலைக்கழகத்தில்) ஆரம்பிக்கப்பட்டது.
1975 ஆம் ஆண்டில், 23 ஆம் இலக்க விலைமதிப்பீட்டாளர்கள் நிறுவகச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, 1979 ஆம் ஆண்டில் இலங்கை விலைமதிப்பீட்டாளர்கள் நிறுவகம் தாபிக்கப்பட்டது. இந்த இலங்கை விலை மதிப்பீட்டாளர் நிறுவகம் தொடர்ந்தும் இயங்கி வந்தமையால், விலை மதிப்பீட்டுத் துறையின் தொழில்வாண்மையும் அந்த நிறுவகத்தின் ஒரு நன்மதிப்புடைய அங்கமாக மாறியது. 85 வருடங்களுக்கும் அதிக காலம் வரலாற்றை அனுபவித்த எமது மூதாதையர்கள், தமது ஆழ்ந்த அறிவையும் நிபுனத்துவத்தையும் பிரயோகித்து, ஆதன முகாமைத்துவத்திலும் விலை மதிப்பீட்டு விடயத்திலும் பாரம்பரியங்களையும் உன்னத நியமங்களையும் பேணி, அரச துறையில் ஒரு மதிப்புடைய தொழில்தேர்ச்சி வாய்ந்த நிறு வகத்தை எமக்காக விட்டுச்சென்றுள்ளனர். இவ்வாறு அர்ப்பணிப்பையும் நற்சிந்தனையையும் கொண்டு வளர்த்தெடுகப்பட்ட, சரியான நன்னெறிகளும் தொழில்வாண்மையும், உயர் தொழில்நுட்பம் ஆட்டிப்படைக்கும் ஓர் உலகில் தொழில்தேர்ச்சிப் பூரணத்துவத்தை அடையும் வகையில் மிக உன்னத ஒழுங்கையும் மதிப்பையும் கொண்டு தொழில்தேர்ச்சி வாய்ந்த விலை மதிப்பீட்டாளர்களாக சேவைகளை வழங்குவதற்கு நாம் எமக்குள் எவ்வாறு சிறந்த நடத்தைகளையும் ஒழுக்கநெறிகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை சுட்டிக் காட்டுகின்றன.
முதலில், யாழ்பாணம் மற்றும் களுத்துறை ஆகிய இடங்களில் மாவட்ட அலுவலகங்களும், பதுளை மற்றும் கண்டி ஆகிய இடங்களில் பிராந்திய அலுவலகங்களும் அமைக்கப்பட்டதையும், பின்னர் மட்டக்களப்பு நகரில் ஒரு மாவட்ட அலுவலகமும், மாத்தறை, குருனாகல் மற்றும் கம்பஹா ஆகிய இடங்களில் பிராந்திய அலுவலகங்களும், அதன் பின்னர், இன்றைய நவீன முன்னேற்றத்துடன் 2006 ஆம் ஆண்டில் அனுராதரம் மற்றும் இரத்தினபுரி ஆகிய இடங்களில் பிராந்திய அலுவலகங்களும் என கிளைகள் விஸ்தரிக்கப் பட்டதையும் தொடா்ந்து, திணைக்களத்தின் பன்முகப் படுத்தல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
திணைக்களத்தின் பணிகளை கணனிமயப்படுத்தும் நோக்கில், 1980 முதல் 1991 ஆம் ஆண்டு வரை திரு பீ.எல். ஆரியதிலக்க பிரதான விலைமதிப்பீட்டாளராக பணியாற்றிய காலப்பகுதியில், முன்னேற்றக் கட்டுப்பாட்டு முறைமையை மேம்படுத்தும் முகமாக திணைக்களம் சார்ந்த புதியதொரு சுற்றறிக்கையின் அறிமுகம் இடம்பெற்றதுடன், இலங்கை விலைமதிப்பீட்டுச் சேவைக்கான ஒரு சேவைப் பிரமாணக்குறிப்பை அறிமுகப்படுத்தும் நோக்கில் ஒரு திணைக்களக் குழுவும் நியமிக்கப்பட்டது.
இந்தத் திணைக்களம், திரு ஆரியத்திலக்கவின் பதவி காலத்தில் அதாவது 1988 ஆம் ஆண்டிலிருந்து, அரச உடமை வர்த்தகத் தொழில்முயற்சிகளை தனியார்மயப்படுத்துவதற்கான விலைமதிப்பீடுகள் பற்றிய அதிகளவான விடயங்களை நிருவகித்தது.
1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை, திரு எஸ்.என்.விஜேபால பிரதான விலைமதிப்பீட்டாளராகப் பதவி வகித்தார். திணைக்களத்திற்கான இவரது பங்களிப்பு மிகவும் மதிக்கப்பட்டது. இவர் 1983 ஆம் ஆண்டிலிருந்து பிரதிப் பிரதான விலைமதிப்பீட்டாளராகவும் பணியாற்றியுள்ளார். இவரது பிரதான தேவைகளாகக் காணப்பட்டவை யாதெனில் விலைமதிப்பீட்டாளர்களுக்கான தனியாவொரு சேவையைத் தாபிப்பதும் மற்றும் தொழில்தேர்ச்சி வாய்ந்த சிறந்த செயலாற்றுகையை அடையும் பொருட்டு திணைக்கள முன்னேற்றக் கட்டுப்பாட்டு முறைமையை மேலும் அபிவிருத்தி செய்வதும் ஆகும்.
திரு எச்.ஆர். த சில்வா 1996 ஆம் ஆண்டு பிரதான விலைமதிப்பீட்டாளராகப் பதவி நியமனம் பெற்று, 2006 ஆம் ஆண்டு வரை அந்தப் பதவியில் தொடர்ந்தும் பதவி வகித்தார். இவரது பதவி காலத்தின் போது, இலங்கை விலைமதிப்பீட்டாளர்கள் சேவைக்கான சேவைப் பிரமாணக்குறிப்பு அங்கீகரிக்கப் பட்டடு 1998.01.01 ஆம் திகதியிலிருந்து செயல்வலுப் பெறும் வகையில் நடைமுறைப் படுத்தப்பட்டது.
இந்தப் பிரதான விலைமதிப்பீட்டாளர் பதவி பணிப்பாளர் நாயகத்தின் தரத்திற்கு இணையாகத் தரமுயர்த்தப்பட்டது. 261 எண்ணிக்கையில் காணப்பட்ட தொழில் தேர்ச்சி ஊழியர்களின் மொத்த ஆளணி 311 ஆக அதிகரிக்கப்பட்டது. அதே நேரம் திணைக்களத்திற்கான அடிப்படை ஆட்சேர்ப்புத் தரமும் பட்டப்படிப்பு மட்டத்திற்கு உயர்த்தப்பட்டது. தற்பொழுது, ஆதன முகாமைத்துவ விலை மதிப்பீடு பற்றிய பீஎஸ்சி (விஷேட) பட்டம் பெற்றவர்கள் மாத்திரம் இந்தத் திணைக்களத்தின் சேவைக்காக ஆட்சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.
2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி, ஆதன முகாமைத்துவ விலைமதிப்பீட்டு விடயத்தில் பீஎஸ்சி கெளரவப் பட்டத்தையும் FRICS பட்டத் தையும் பெற்ற திரு பி.டப்ளியூ. சேனாரத்ன பிரதான விலைமதிப்பீட்டாளராக நியமிக்கப்பட்டார். இவரது நியமனம், வரலாற்றுக்கு முதலாவது தகுதி வாய்ந்த இலங்கை நாட்டுப் பிரதான விலைமதிப்பீட்டாளர் என்ற பெருமையைச் சேர்த்தது. இவர் ‘நோக்கு 2012’ ஒரு பரந்த நோக்கையும் உருவாக்கியுள்ளார்.
ஆதன முகாமைத்துவ விலைமதிப்பீட்டுப் பட்டதாரிகளுக்கு விலைமதிப்பீட்டுத் துறையில் புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்கும் நோக்கில், திணைக் களத்தின் அனுமதிக்கப்பட்ட தொழில்தேர்ச்சி ஆளணி எண்ணிக்கை 311 இல் இருந்து 438 வரை அதிகரிக்கப்பட்டது. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் கொண்டு விலைமதிப்பீட்டுச் சேவையை நெறிப்படுத்தும் நோக்கில், ஒரு அடிப்படைப் படிமுறையாக அனைத்துப் பிராந்திய அலுவல கங்களிலும் உள்ளூர் பகுதி வலையமைப்புகள் தாபிக்கப்பட்டன. இந்தத் திணைக்களத்தின் ஊழியர்களுக்கு பணியாற்றக்கூடிய சிறந்த சூழலொன்றை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில், தலைமை அலுவலக வளாகமும் கொடும்பு அடிப்படை திறன்கள் அபிவிருத்தி நிலையமும் பாரம்பரிய அலுவலக நிலையிலிருந்து நவீத தரங்கள் வாய்ந்த நிலைக்கு மாற்றப்பட்டன. திறன்கள் அபிவிருத்தி நோக்கில், மூன்று மாடிக் கட்டிட நவீன பயிற்சி நிலையம் ஒன்று கண்டியில் தாபிக்கப்பட்டது.
கடந்த கால அனுபவங்களினூடாகவும் விடய ஆய்வுகளினூடாகவும் இன்றைய இயக்க முறைமையிலுள்ள பிரச்சினைகள் கண்டறியப்பட்டதன் பின்னர், 2012 நோக்கு என்ற கூட்டிணைந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. உலகலாவிய நியமங்களை விஞ்சி தொழில்தேர்ச்சி வாய்ந்த சிறந்த செயலாற்றுகையை அடையும் வகையில், பின்வருவனவற்றில் இலக்குக் கொண்டு, 2011 திசம்பர் 31 இல் முடிவடைந்த காலப் பகுதிக்கான பயனுள்ள சிறந்த கூட்டுப் பணி நோக்கில், இந்த மாபெரும் கூட்டிணைந்த திட்டம் 2007 ஆம் ஆண்டு சனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் செயல்வலுப் பெறும் வகையில் உத்தி யோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
  • சிறந்த அறிவு மூல தொழில்தேர்ச்சி மதிப்பு
  • திறன்கள் அபிவிருத்தி மூல ஊக்குவிப்பு
  • நவீன தொழில்நுட்ப செயற்படுத்துகை மூல உடனடி சேவை
  • வாழ்நாள் கற்கை, செயலாற்றுகை மதிப்பீடு மூல தொழில் மதிப்பு
  • அர்ப்பணிப்பு மூல வினைத்திறன்