1. Skip to Menu
  2. Skip to Content
  3. Skip to Footer>
Home >> எம்மைப் பற்றி >> தலைமை விலைமதிப்பீட்டாளரின் செய்தி
வழு
  • JFolder::create: Could not create directory
  • Can't create directory: images/stories/thumbnails
  • JFolder::create: Could not create directory
  • JFolder::create: Could not create directory
  • Can't create directory: images/stories/thumbnails/remote
  • JFolder::create: Could not create directory
அறிவிப்பு
  • Change the permissions for all the folders to 777
  • Change the permission for all the folders to 777

பிரதான விலைமதிப்பீட்டாளரின் செய்தி

அரசாங்க விலைமதிப்பீட்டுத் திணைக்களத்தின் ஊழியர்களாகிய நாம் எமது சேவைகள் தொடர்பில் எமக்குச் சாட்டப்பட்ட பொறுப்பின் முக்கியத்துவத்தை உணர்கின்றோம். எமது அநேகமான பணிகள் மில்லியன் ரூபாய்களுடன் சம்பந்தப்பட்டதாகும். ஆதலால், மிகவும் செவ்வையான விதத்தில் எமது வாடிக்கையாளர்களுக்கு எமது சேவைகளை வழங்கும் பொருட்டு மிகக் கவனம் எடுப்போம். இந்த விலைமதிப்பீட்டுத் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களும் எமது நோக்கத்தினதும் செயற்பணியினதும் முழுமையான அர்த்தத்தைப் புரிந்து கொள்வார்கள். ஆகையால் இந்த நோக்கத்தையும் செயற்பணியையும் அடைவதை நோக்கிய அனைத்து முயற்சிகளுக்கும் வழிகாட்டப்படும்.
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையிலுள்ள முன்னேற்றத்தைக் கொண்டு, உலகலாவிய நியமங்களைப் பின்பற்றி துரிதமாகத் தொழில் வாண்மையைப் பேணுவதனூடாக எமது சேவைகளைத் தொடர்ந்தும் வழங்க நாம் எதிர்பார்ப்பதால், e-அரச கொள்கையின் தேவைப்பாடுகளுக்கு இணங்க விலைமதிப்பீட்டுத் திணைக்களத்தின் அலுவலக இணையத் தளத்தை புத்துயிர்ப்பிப்பது சிறந்தது என நாம் சிந்தித்தோம்.
எமது இந்த சிந்தனையினூடாக, ஆதனங்களின் வரிமதிப்பீடு, கட்டாயக் காணிகள் சுவீகரித்தலுக்கான நஷ்டஈட்டுக் கொடுப்பனவு மற்றும் திணைக்களத்தினால் வழங்கப்படும் ஏனைய சேவைகள் என்பவற்றுடன் சம்பந்தப்படுகின்ற சட்ட விடயங்கள் பற்றி பொது மக்களுக்குப் போதிக்க நாம் எதிர்பார்க்கின்றோம்.