1. Skip to Menu
  2. Skip to Content
  3. Skip to Footer>
Home >> அடிக்கடி வினவப்படும் வினாவும் பதிலும்
வழு
  • JFolder::create: Could not create directory
  • Can't create directory: images/stories/thumbnails
  • JFolder::create: Could not create directory
  • JFolder::create: Could not create directory
  • Can't create directory: images/stories/thumbnails/remote
  • JFolder::create: Could not create directory
அறிவிப்பு
  • Change the permissions for all the folders to 777
  • Change the permission for all the folders to 777

FAQ's


Close All | Open All
A1: ATD இல் தேவைப்படுத்தப்பட்ட தேவையான விபரங்களை உள்ளூராட்சி மன்றத்தினூடாகச் சமர்ப்பித்தல் வேண்டும். அத்துடன் பின்வரும் ஆவணங்களையும் நீங்கள் வழங்கத் தேவைப்படுத்தப் படலாம்.  - உரிய உறுதிகள் - உரிய நில அளவைத் திட்டத்தின் பிரதி - பிரசித்தி பெற்ற நொத்தாரிசுவினால் சான்றுபடுத்தப்பட்ட (ATD) உறுதியின் அசல்பிரதி - வருமானப் பரிசோதகரின் அறிக்கை
A2: பெயரைத் திருத்துவதற்கு ஒரு சட்டத்தரணியினால் அல்லது ஒரு பிரசித்தி பெற்ற நொத்தாரிசுவினால் சான்றுபடுத்தப்பட்ட ஒரு சத்தியக் கடதாசியை உள்ளூராட்சி மன்றத்தினூடாக சமர்பிக்க வேண்டும்.
A3: (i) புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்ட ஒரு காணிக்கான அல்லது ஒரு ஆதனத்தின் ஒரு பாகத்திற்கான அல்லது திரண்ட ஆதனங்களுக்கான இலக்கம் ஒன்று உங்களுக்குத் தேவை எனில், ATD படிவத்தை கீழ்காணும் ஆவணங்களின் மூலம் ஆராதப்படுத்தி உள்ளூராட்சி மன்றத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும். -உரிய உறுதியின் பிரதி -நில அளவைத் திட்டத்தின் பிரதி -பிரசித்தி பெற்ற நொத்தாரிசுவினால் சான்றுபடுத்தப்பட்ட (ATD) -உறுதியின் அசல்பிரதி -வருமானப் பரிசோதகரின் அறிக்கை
A4: (i) ஒரு புதிய நிர்மாணமாயின், உள்ளூராட்சி மன்றத்திற்கு கட்டிடம் பற்றிய ஒரு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.                        (ii) ஏற்கனவேயிருக்கின்ற கட்டிடத்தைத் திருத்துவதாயின், அல்லது ஒரு கட்டிடத்தை இடித்துத்தள்ளுவதாயின் அல்லது ஒரு கட்டிடத்தின் பாவனையை மாற்றுவதாயின், உள்ளூராட்சி மன்றத்திற்கு எழுத்திலான ஒரு வேண்டு கோளைச் சமர்ப்பிக்க வேண்டும்.
A4: (i) மேலே காணப்படும் A3 (i) மற்றும் A4(ii) ஆகிய விடயங்களின் கீழ் குறிப்பிடப்பட்ட படிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
A5: குறித்த அறிவித்தல் கிடைத்த திகதியிலிருந்து ஒரு மாத காலத்திற்குள் உள்ளூராட்சி மன்றத்திற்கு எழுத்திலான ஒரு மேன்முறையீட்டைச் சமர்ப்பிக்க வேண்டும்.  
A6: வறுமை, வர்த்தக நடவடிக்கை மூடப்பட்டுள்ளமை ஆகிய காரணங்களை முன் வைத்து உள்ளூராட்சி மன்றத்திற்கு ஒரு மேன்முறையீட்டைச் சமர்ப்பிதன் மூலம் நீங்கள் வரி செலுத்துவதிலிருந்து விடுவிப்புப் பெறலாம்.
A7: விலைமதிப்பீட்டுத் திணைக்களத்திற்கு உரித்து சமர்ப்பிக்கப்பட்டமை பற்றிய நிர்ணயமான 10 (1) அ பிரிவின் கீழான தீர்மானத்தின் நியாயமானவொரு காலப் பகுதியினுள், குறித்த நஷ்டஈட்டுத் தொகை கணக்கீட்டு அலுவலருக்கு அறிவிக்கப் படும்.
A8: மேலே உள்ள விடை 6 ஐ பார்க்குக.
A9: நஷ்டஈடு வழங்கப்பட்ட நாளின் பின்னர், 21 நாட்களுக்குள் காணிகள் சுவீகரித்தல் பற்றிய மீளாய்வு சபைக்கு ஒரு மேன்முறையீட்டைச் சமர்ப்பிக்கலாம். கீழிறக்கங்களிலுள்ள 1950 இன் 09 ஆம் இலக்க காணிகள் சுவீகரித்தல் சட்டத்தின் 17 ஆம் பிரிவைப் பார்க்குக.
A10: உங்களது விருப்புத் தன்மையைத் தெரிவு செய்யுங்கள்  
  • உரிமையாளர்  
  • குத்தகை உரிமையாளர்  
  • மாதாந்த வாடகையாளர்  
  • நியதிச்சட்ட வாடகையாளர்
  • குத்தகைப் பண்ணையாளர்
  • உரிமையாளராயின்
உங்களுக்கு உரித்துண்டு. வினா Q7 இற்கான பதில் Q7 ஐப் பார்க்குக.
  • குத்தகை உரிமையாளராயின்
உங்களுக்கு உரித்துண்டு. வினா Q7 இற்கான பதில் Q7 ஐப் பார்க்குக.
  • மாதாந்த வாடகையாளராயின்
உங்களுக்கு நஷ்டஈட்டுக்கு உரித்துக் கிடையாது.
  • நியதிச்சட்ட வாடகையாளராயின்
உங்களுக்கு உரித்துண்டு. வினா Q7 இற்கான பதில் Q7 ஐப் பார்க்குக.
  • குத்தகைப் பண்ணையாளராயின்,
உங்களுக்கு உரித்துண்டு. மேலதிக விபரங்களுக்கு காணிகள் சுவீகரித்தல் சட்டத்தின் 65 ஆம் பிரிவைப் பார்க்குக.
A11: 4 ஆம் பிரிவின் கீழ் அறிவித்தல் வழங்கப்பட்ட பின்னர், உங்களது கட்டிடத்தைத் திருத்தினால் அல்லது அந்தக் கட்டிடத்திற்கு ஏதாவது பாகத்தைச் சேர்த்தால், நஷ்டஈடு கணிக்கப்படும் போது அத்தகைய மேம்பாட்டு விடயங்களின் பெறுமானம் கருத்திற் கொள்ளப்பட மாட்டாது. ஆயினும், ஆதனத்தின் உகந்த பராமரிப்புக்காக அத்தகைய மேம்பாடு ஏதும் மேற் கொள்ளப்பட்டுள்ளது என்றால், அத்தகைய மேம்பாட்டுக்கான பெறுமானம் நஷ்டஈடு கணிக்கப்படும் போது கருத்திற் கொள்ளப்படும்.
A12: இந்த நிபந்தனை அறிக்கை தயாரிக்கப்பட்ட நேரத்தில் நீங்கள் சமூகமளித்திருந்தால், அதன் பிரதியொன்றை உங்களுக்குப் பெற்றுக் கொள்ளலாம். கணக்கீட்டு அலுவலருக்கு ஒரு வேண்டுகோளைச் சமர்ப்பிக்க வேண்டும்.  
நீங்கள் ஒரு தனியார் தரப்பு தனியாளாகவிருப்பின்:, A13: (i) நீங்கள் உங்களது ஆதனத்தை வாடகை / குத்தகை அடிப்படையில் வழங்க எதிர்பார்ப்பீர்களாயின், உங்களது ஆதனத்தை வாடகை / குத்தகை அடிப்படையில் வழங்க நீங்கள் எதிர்பார்க்கும் குறித்த நிறுவனத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். A13: (ii) நீங்கள் ஒரு அரசாங்க நிறுவனத்திற்கு அல்லது அரசாங்கமும் தனியார் தரப்பும் பங்கு வகிக்கும் ஒரு நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு ஆதனத்தை வாடகை / குத்தகை அடிப்படையில் பெறுவதற்கு எதிர்பார்ப்பீர்களாயின், நீங்கள் வாடகை / குத்தகை அடிப்படையில் பெறுவதற்கு எதிர்பார்க்கும் ஆதனத்திற்குச் சொந்தமான அரசாங்க நிறுவனத்திற்கு அல்லது அரசாங்கமும் தனியார் தரப்பும் பங்கு வகிக்கும் நிறுவனத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். A13: (iii) அரசாங்கமும் தனியார் தரப்பும் பங்கு வகிக்கும் ஒரு நிறுவனத்திற்கு உங்களது ஆதனத்தை விற்பனை செய்வீர்களாயின், உங்களது ஆதனத்தை நீங்கள் விற்பனை செய்ய எண்ணும் நிறுவனத்தின் ஊடாக முதலில் அது பற்றி  அறிவிக்க வேண்டும். அதன் பின்னர் விலை மதிப்பீட்டுத் திணைக்களம் தனது விலைமதிப்பீட்டுச் சேவையை அந்த நிறுவனத்திற்கு வழங்கும். A13: (iv) அரசாங்கமும் தனியார் தரப்பும் பங்கு வகிக்கும் ஒரு நிறுவனத்திடமிருந்து ஒரு ஆதனத்தைக் கொள்வனவு செய்வீர்களாயின், குறித்த ஆதனத்தை அரசாங்கமும் தனியார் தரப்பும் பங்கு வகிக்கும் எந்த நிறுவனத்திடமிருந்து நீங்கள் கொள்வனவு செய்ய விரும்புகின்றீர்களோ அந்த நிறுவனத்தினால் இந்த விடயம் கையாளப்படும், அதனைத் தொடர்ந்து அந்தக் குறித்த நிறுவனத்திற்கு இந்த விலைமதிப்பீட்டுத் திணைக்களம் தனது விலை மதிப்பீட்டுச் சேவையை வழங்கும். அரசாங்கமும் தனியார் தரப்பும் பங்கு வகிக்கும் நிறுவனமாயின், A13: (v)  வாடகை / குத்தகை அடிப்படையில் ஒரு தனியார் ஆதனத்தை அல்லது ஒரு அரசாங்க நிறுவனத்திற்கு / அரசாங்கமும் தனியார் தரப்பும் பங்கு வகிக்கும் ஒரு நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு ஆதனத்தைக் கொள்வனவு செய்வ தாயின்,   பொருத்தமானவாறு, பின்வரும் ஆவணங்களுடன் விலைமதிப்பீட்டுத் திணைக் களத்திற்கு வேண்டுகோளொன்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.   வாடகையாயின் குத்தகையாயின் வேண்டுகோள் வேண்டுகோள் உரித்து ஆவணம் உரித்து ஆவணம் கோரப்படும் வாடகை நில அளவைத் திட்டம் வாடகை ஆரம்பமாகும் திகதி             குத்தகை ஆரம்பமாகும் திகதி A13: (vi) ஒரு தனியாள் தரப்புக்கு அல்லது ஒரு அரசாங்க நிறுவனத்திற்கு / அரசாங்கமும் தனியார் தரப்பும் பங்கு வகிக்கும் ஒரு நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு ஆதனம் வாடகை / குத்தகை அடிப்படையில் ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாயின், அந்த ஆதனம் தொடர்பில் ஒரு வாடகை மீளாய்வை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்காக: பின்வரும் தகவல்களுடன் விலைமதிப்பீட்டுத் திணைக்களத்திற்கு ஒரு வேண்டுகோளைச் சமர்ப்பிக்கவும் வேண்டும்.
  • வாடகை மீளாய்வு செயல்வலுப் பெறும் திகதி (வாடகை மீளாய்வு தேவைப்படுகின்ற நேரத்திலிருந்த)
  • செலுத்தப்பட்ட வாடகை
  • ஒரு வாடகை மீளாய்வுக்கான நிலச் சொந்தக்காரரின் வேண்டுகோளினது சான்றுபடுத்தப்பட்ட ஒரு பிரதி
A13: (vii) அரசாங்கமும் தனியார் தரப்பும் பங்கு வகிக்கும் ஒரு நிறுவனம் தனது ஆதனத்தை அரசாங்கமும் தனியார் தரப்பும் பங்கு வகிக்கும் பிரிதொரு நிறுவனத்திற்கு அல்லது ஒரு தனியாள் தரப்புக்கு விற்பனை செய்ய வேண்டு மாயின், கீழ்காணும் ஆவணங்களுடன் விலைமதிப்பீட்டுத் திணைக்களத்திற்கு ஒரு வேண்டுகோளைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • நில அளவைத் திட்டம்
  • உரித்து ஆவணம்
A13: (viii) அரசாங்கமும் தனியார் தரப்பும் பங்கு வகிக்கும் ஒரு நிறுவனம் தனது ஆதனத்தை அரசாங்கமும் தனியார் தரப்பும் பங்கு வகிக்கும் பிரிதொரு நிறுவனத்திடமிருந்து அல்லது ஒரு தனியாள் தரப்பிடமிருந்து கொள்வனவு செய்ய வேண்டுமாயின், கீழ்காணும் ஆவணங்களுடன் விலைமதிப்பீட்டுத் திணைக்களத்திற்கு ஒரு வேண்டுகோளைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • நில அளவைத் திட்டம்
  • உரித்து ஆவணம்
  • ஆதனத்தின் உரிமையாளரினால் கோரப்பட்ட விலை
A14: உரிய அரசாங்க நிறுவனத்தினூடாக / அரசாங்கமும் தனியார் தரப்பும் பங்கு வகிக்கும் நிறுவனத்தினூடாக ஒரு மேன்முறையீடு சமர்ப்பிக்கப்படுமாயின் இந்த விடயம் கருத்திற் கொள்ளப்படலாம்.